தமிழர்கள் இருவர் கடத்திக் கொலை: கொமாண்டர் மாபாவின் விளக்கமறியல் நீடிப்பு
கொட்டாஞ்சேனையில் கடந்த 2009ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட வடிவேல் பக்கிளிசாமி லோகநாதன், இரத்னசாமி பரமானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டு கொலைச் செய்யப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை தொடர்வதற்கு சந்தேக நபராக கருதி கைது செய்யப்பட்டுள்ள வெலிசறை கடற்படை வைத்தியசாலையின் நிறைவேற்று அதிகாரம் கொன்ட லெப்டினன் கொமாண்டர் தம்மிக அனில் மாபாவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வழக்கு விசாரணைகள் ஆரம்பமான போது ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வெலிசறை கடற்படை வைத்தியசாலையின் பிரதான நிறைவேற்று அதிகாரி லெப்டினன் கொமான்டர் அனில் மாபா சிறை அதிகாரிகளால் மன்றில் ஆஜர் செய்யப்பட்டார். இந் நிலையில் பொலிஸ் பரிசோதகர் இலங்கசிங்க மன்றில் கருத்துக்களை முன்வைத்தார்.
இதன் போது விசாரணைகள் நிறைவு பெறாத நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக சட்ட மா அதிபரின் அலோசனையை நாடியுள்ளதாக பொலிஸ் பரிசோதகர் இலங்கசிங்க இதன் போது குறிப்பிட்டு மேலதிக விசாரணை அறிக்கையை மன்றில் சமர்பித்தார். இதனையடுத்து இந்த விவகாரத்தில் கைதாகியுள்ள லெப்டினன் கொமான்டர் அனில் மாபாவுக்கு பிணை கோரப்பட்ட போதும் அதனை நிராகரித்த நீதிவான் விளக்கமறியலை மேலும் 14 நாட்களுக்கு நீடித்தார்.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்