ஈராக்கில் இருந்து குவைத்துக்கு புறா மூலம் போதை மாத்திரைகள் கடத்திய அதிரும் சம்பவம்! இதுதான் சிக்கிகொண்ட புறா
ஈராக்கில் இருந்து குவைத்துக்கு புறா மூலம் போதை மாத்திரைகள் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈராக்கில் இருந்து குவைத்துக்கு புறா மூலம் போதை மாத்திரைகள் கடத்தல்
புறாவின் முதுகில் கடத்தப்பட்ட போதை மாத்திரைகள்.
குவைத்:
மனிதர்கள் மூலம் போதை மாத்திரைகள் கடத்தப்பட்டு வருகிறது.
ஆனால் அவர்கள் சுங்க இலாகா துறையினரிடம் சிக்கி கொள்கின்றனர். எனவே தற்போது புதுவிதமான நுட்பத்தை கடத்தல்காரர்கள் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
மன்னர் காலத்தில் புறாக்கள் மூலம் ரகசிய தூது மற்றும் கடிதங்கள் அனுப்பப்பட்டு வந்தன. பொதுவாக புறாக்கள் குறைந்த பட்சம் 100 மைல்கள் தூரம் பறந்து சென்று தகவலை சேர்த்து விட்டு மீண்டும் திரும்பும் திறன் கொண்டவை.
அதற்காக அவற்றுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. கடிதங்கள் மற்றும் தகவல்கள் அனுப்பப்பட்ட நிலையில் தற்போது புறாக்கள் கடத்தப்பட்டு வருகின்றன.
ஈராக்கில் இருந்து குவைத்துக்கு புறாக்கள் மூலம் போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக சுங்க இலாகாவினருக்கு தகவல் கிடைத்தது. எனவே குவைத் சுங்க இலாகா அலுவலகம் அருகே பறந்து வந்த ஒரு புறாவை அதிகாரிகள் வழிமறித்து பிடித்தனர்.
அதன் முதுகில் போதை மாத்திரைகள் அடங்கிய ஒரு பை இருந்தது. அதில் 178 போதை மாத்திரைகள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்