Header Ads

நடுவானில் தடுமாறிய விமானம்! மூகுடையும் அளவிற்கு காயமடைந்த பயணிகள்! அதிர்ச்சி வீடியோ

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு ரஷியாவின் ஏரோபிளாட் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக பயணிகள் விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது. நேற்று காலை அந்த விமானம் பாங்காக் நகரை நெருங்கிய நிலையில் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. 


அப்போது காற்றில் ஏற்பட்ட வெற்றிடம் காரணமாக விமானம் திடீரென குலுங்கி மேலும் கீழுமாக பறக்கத் தொடங்கியது. பின்னர் சிறிது நேரத்தில் வழக்கம் போல் சீராக பறந்தது. விமானம் குலுங்கியபோது இருக்கைகளில் இருந்த பயணிகளில் பெரும்பாலானோர் கீழே விழுந்தனர். இவர்களில் 3 குழந்தைகள் உள்பட 27 பேருக்கு கை, கால்களில் எலும்பு முறிவும், பலத்த சிராய்ப்பு காயங்களும் ஏற்பட்டன. 


படுகாயம் அடைந்தவர்களில் 24 பேர் ரஷியர்கள். மூன்று பேர் தாய்லாந்து நாட்டவர்கள் ஆவர். பாங்காக் நகரில் விமானம் தரை இறங்கியதும் 27 பேரும் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் பற்றி ஏரோபிளாட் விமான அதிகாரிகள் கூறுகையில், ‘‘வானம் தெளிவாக இருந்த நிலையில் காற்றில் வெற்றிடம் ஏற்பட்டதை கண்டறிந்து விமானம் குலுங்கப்போவதை உடனடியாக பயணிகளிடம் தெரிவிக்க முடியாமல் போனது. 



அதேநேரம் படுகாயம் அடைந்த பயணிகள் ‘சீட் பெல்ட்’டை அணியாமல் இருந்துள்ளனர். இதனால்தான் அவர்கள் காயம் அடைய நேரிட்டது’’ என்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.