மான்செஸ்டர் குண்டு தாரி மற்றுமொரு குண்டை வைத்தார்: பகீர் தகவல் வெளியானது ?
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரித்தானிய மான்செஸ்டர் பகுதியில் வெடி குண்டு ஒன்றை வெடிக்கவைத்து 22 பேரைக் கொலை செய்த நபர். மற்றுமொரு குண்டை வைத்திருக்கிறார் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது. அவர் குண்டை வெடிக்கச் செய்த அதே நாள், காலையில் அவர் ஒரு நீல நிற சூட்கேசுடன் செல்லும் காட்சி ஒன்று CCTV கமராவில் பதிவாகியுள்ளது.
ஆனால் அவர் அந்த நீல நிற சூட்கேசை எங்கே கொண்டு சென்றார் என்பதனை இதுவரை பொலிசார் கண்டுபிடிக்கவில்லை. அன்று இரவு சுமார் 10,30 மணிக்கு குண்டை அவர் வெடிக்கவைத்து. தானும் இறந்து போனார். ஆனால் அவர் கொண்டு சென்ற சூட்கேஸ் எங்கே உள்ளது ? என்பது தெரியாது என்றும். இது போன்ற ஒரு சூட்கேசை யாராவது கண்டால் உடனே அறியத்தருமாறும் பொலிசார் வேண்டும் கோள் விடுத்துள்ளார்கள்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்