Header Ads

யாழில் CTB பஸ் காரன் பொதுமக்களுக்கு செய்யும் அநியாயத்தை பாருங்கள்! வீடியோவை பார்த்தால் புரியும்

யாழ்ப்பாணத்தின் அனைத்து வீதிகளிலும் தனியார் மற்றும் அரச பஸ்கள் கொலைவெறியோடு பல உயிர்களை பலியெடுப்பது சாதாரண விடயமாகிவிட்டது. நீமன்றங்களும் பல விதிகளை கடைப்பிடிக் கட்டளையிட்டும். 


அவர்கள் இதுவரையில் அவற்றிற்கு செவிசாய்க்கவில்லை. நேற்றுமுன்தினம் (29-3)காலை 9.20 மணியளவில் புன்னாலைக்கட்டுவன் சந்தியில் அரச பஸ்ஸின் வருகைக்காக காந்திருந்த தனியார் பஸ் கொலைகாரர்கள் பஸ்ஸினைக்கண்டதும் தலைதெறிக்க போட்டிக்கு ஓடியதால் வீதியில் பயணித்தோர் அச்சத்துடன் பயணித்த்தனர்.


கோண்டாவிலில் தனியார் பஸ் சங்கங்களின் நேரக்கணிப்பாளர் கடமையில் இருந்தபோதும் அங்கு நிறுத்தாது திருநெல்வேலிவரை போட்டிக்கு ஒடியதால் பயணிகள் பலர் ஏற்றப்படாமலேயே கைவிடப்பட்டனர் .இந்த வழித்தடத்திலேயே கடந்தவருடம் அநியாயமாக பாடசாலைச்சிறுவன் தனியார் பஸ் கொலையாளியால் கொலைசெய்யப்பட்ட சோகம் இன்னும் மறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த நிலையில் தாங்கள் இவ்வாறுதான் கட்டுப்பாடில்லாமல் வீதியில் பயணிப்போம் பலரை கொலையும்செய்வோம் மாகாண போக்குவரத்து அமைச்சர் தம்மை ஒன்றும்செய்ய முடியாது என அண்மையில் யாழ் பிராந்திய கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் இணையத்தலைவரான கெங்காதரன் தெரிவித்துள்ளார் . இது கொலைகார பஸ் சாரதிகளுக்கு ஊக்கமளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 


இதே வேளை யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்களும் தவறான முறையில் பயணிகள் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.