லண்டனில் தாக்குதல் நடத்தவேண்டிய நபர்: ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார் - நடந்தது என்ன ?
சிரியாவில் பிரித்தானிய கூட்டுப்படை நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் 25 வயதான ரெயாட் கான் என்னும் இளைஞர் கொல்லப்பட்டார். இவர் அயர்லாந்தில் வசித்து வந்த முஸ்லீம் நபர் ஆவார். 2015 ல் நடந்த தாக்குதல் ஒன்றில் இவர் கொல்லப்பட்டார். ஆனால் அன்றைய தினம், இவரைப் பற்றிய தகவல் எதனையும் பிரித்தானிய உளவுத்துறையால் பெற முடியவில்லை. பிரித்தானியாவில் இருந்து கிளம்பிச் சென்று ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொண்ட ஒரு இளைஞர் என்பது மட்டுமே உளவுத்துறை அறிந்த உண்மையாக இருந்தது.
ஆனால் இன் நபரே பல நாடுகளில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியுள்ளார். மேலும் லண்டனில் எவ்வாறு தாக்குதல் நடத்துவது ? அதில் யாரை எல்லாம் இணைத்துக் கொள்வது என்பது போன்ற அதி முக்கிய திட்டங்களை இவரே தீட்டி வந்துள்ளார். இன் நிலையில் தான் 2015ம் ஆண்டு சற்றும் எதிர்பாராமல் இடம்பெற்ற ஒரு தாக்குதலில் இவர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தான் இவர் தீட்டிய திட்டம் தொடர்பான ஆவணங்கள் பிரித்தானிய புலனாய்வுத்துறைக்கு கிடைத்துள்ளது.
இதனை வைத்துப் பார்க்கும்போது, கொல்லப்ப ரெயாட் கான் மிக மிக முக்கியமான நபர் என்ற உண்மை தற்போது தான் பிரித்தானிய உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என்கிறார்கள்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்