சோமாலிய கடற்கொள்ளையர்களால் மீண்டுமொரு அட்டகாசம்! இந்தக் கப்பலையும் தூக்கியது எப்படி ?
11 கப்பல் பணியாளர்களுடன் பயணித்த இந்திய வர்த்தக கப்பல் ஒன்று சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளது.
துபாயில் இருந்து ஏமனில் உள்ள அல் முகாலா துறைமுகத்திற்கு எண்ணெய் ஏற்றிக் கொண்டு சென்ற இந்திய நாட்டை சேர்ந்த அக் கவுசார் என்ற வர்த்தக கப்பலை இம் மாதம் முதலாம் திகதி சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்தி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமாலியாவை சேர்ந்த கொள்ளையடிப்பு எதிர்ப்பு துறையின் முன்னாள் இயக்குநர் அப்திரிசாக் முகமது திரிர் கருத்து தெரிவிக்கையில், “இந்திய கப்பலை சோமாலியா கொள்ளையர்கள் கடத்திவிட்டனர் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம்.
கப்பல் சோமாலியா கடற்கரையை நோக்கி செல்கிறது,” என்று கூறிஉள்ளார்.
சோமாலியா கடற்கொள்ளையர்களின் தொடர்ச்சியான கொள்ளையடிப்பால் இப்பகுதியில் கப்பல் வர்த்தக தொழிலானது பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
5 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் லாப நோக்குடன் செயல்படும் வர்த்தக கப்பல்கள் குறிவைக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதமும் இதேபோன்று இலங்கை பணியாளர்களுடன் எண்ணெய் கப்பல் ஒன்று கொள்ளையர்களால் கடத்தப்பட்டது.
சோமாலியா பேசின் பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டுக்கு பின்னர் வெற்றிகரமாக கடத்தப்பட்ட வர்த்தக கப்பல் இதுவாகும்.
சோமாலியா கடற்கொள்ளையில் 2010ம் ஆண்டு மிகவும் முக்கியமான இடம்பெற்றது. இதனையடுத்து கப்பல் மூலம் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் ஆயுதம் தாங்கிய பாதுகாப்பை கப்பலில் நிறுத்த முடிவு செய்தது. ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். தேவைப்படுமாயின் எச்சரிக்கும் விதமாக துப்பாக்கியால் சுடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்