நான் கொலைகார கோஷ்டிகளை வைத்திருந்தது உண்மைதான்! கோத்தாவின் ஏளனம்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு வருவது தொடர்பில் இதுவரையில் எந்தவிதமான தீர்மானத்தையும் எடுக்கவில்லை என முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் சர்வதேச ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்,
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியலுக்கு வருவதற்கு விருப்பமில்லாத போதும் நாட்டின் நலனுக்காகவும் மக்களுக்கு சேவையாற்றவும் அரசியல் ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமையும். அரசியலுக்கு வந்த பிறகும் நான் சிறந்த அரசியல்வாதியாக இருப்பேனா என்பது எனக்கு தெரியாது.
முன்னாள் ஜனாதிபதி எப்போதும் அரசியல் எனக்கு தெரியாது அரசியலில் எவ்வாறு நான் இருப்பேன் என்பார்.
தமது சொந்த சுய விருப்புக்களுக்காக தலைவர்களை தேர்ந்தெடுப்பது அவரவர்களது சுயநலத்திற்காகவாகும். செயற்பாட்டு அரசியலில் நான் பங்கு கொள்வேனா என்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கவில்லை.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப செயற்பாட்டு அரசியலுக்கு வருவதற்கு தீர்மானித்தமைக்கே முன்னாள் பாதுகாப்பு செயலாளரை உதாரணம் காட்டி கருத்து வெளியிட்டிருந்தார்.
டொனால்ட் ட்ரம்பின் செயற்பாட்டினை பின்பற்றி செயற்படும் விதம் குறித்து கற்றுக்கொண்டிருக்கின்றேன்.
யுத்தகுற்றம்
யுத்த குற்றங்கள் இடம்பெற்றதாக குறிப்பிட்டு பாதுகாப்பு படையினரை விசாரிக்க நினைப்பது. தவறான விடயமாகும். உள்நாட்டு நீதித்துறையை விடுத்து சர்வதேச நீதிமன்ற விசாரணையை நிறுவது ஏற்கமுடியாததாகும்.
யுத்த குற்றம் இடம்பெற்றிருக்காது என்று நான் முழுமையாக மறுக்கவில்லை. இருப்பினும் மொத்த இராணுவத்தையும் குறை கூறுவது தவறானது என்றே சுட்டிகாட்டுகின்றேன். எனக்கு கீழ் கொலை கும்பல் ஒன்று ஊடகவியலாளர்களையும் முக்கியஸ்தர்களையும் மிரட்டியது என பொன்சேகா கூறுவது நகைப்புக்குரியதாகும்.
அவ்வாறு என்னால் எப்படி செய்ய முடியும். பாதுகாப்பு படையினர் இராணுவ தளபதிக்கு கீழேயே உள்ளன.
\
அவ்வாறிருக்கையில் இதற்கு என்னை காரணம் காட்டுவது எவ்வாறு கடந்த ஆட்சியில் ஊடகவியலாளர்கள் கடத்தல் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறவில்லை என்று விமர்சித்தாலும். தற்போது வௌிப்படுவதாக கூறப்படும் காரணங்கள் அனைத்தும் கடந்த அரசாங்கத்தின் கீழ் இடம்பெற்ற விசாரணைகளின் போது வௌியான தகவல்களாகும் என்றார்.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்