கிஸ் அடித்து போராட்டம் நடத்தும் காதலர்கள்! என்ன கன்றாவி இது ? கொஞ்சம் பாருங்கள் மக்களே
காதல் ஜோடியினர் மீது சிவசேனாவினர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து கேரளாவைச் சேர்ந்த கிஸ் ஆப் லவ் அமைப்பினர் இளைஞர்கள், இளம்பெண்கள் பொது இடத்தில் கட்டித்தழுவி முத்தமிட்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
சிவசேனா தாக்குதலை கண்டித்து இளைஞர்கள்- பெண்கள் முத்தமிடும் போராட்டம்
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சியில் புகழ் பெற்ற மரைன் டிரைவ் பூங்கா உள்ளது.
கடற்கரையை யொட்டிள்ள இந்த பூங்காவுக்கு ஏராளமான பொதுமக்களும், காதல் ஜோடிகளும் வருவது வழக்கம்.
சர்வதேச மகளிர் தினத்தன்று இந்த பூங்காவுக்குள் புகுந்த சிவசேனா தொண்டர்கள் அங்கிருந்த காதல் ஜோடிகளை கம்புகளால் அடித்து விரட்டினார்கள். இந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசாரின் கண் முன்பு நடந்த இந்த தாக்குதலுக்கு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
கேரள சட்டசபையிலும் காங்கிரஸ் கட்சியினர் காதல் ஜோடிகள் மீது தாக்குதல் நடத்திய சிவசேனாவை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்த நிலையில் காதல் ஜோடியினர் மீது சிவசேனாவினர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து கேரளாவைச் சேர்ந்த கிஸ் ஆப் லவ் அமைப்பினர் நேற்று மாலை மரைன் டிரைவ் பூங்காவில் திரண்டனர். இந்த அமைப்பைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள், இளைஞர்கள்,
இளம்பெண்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் கட்டித்தழுவி முத்தமிட்டு தங்களின் எதிர்ப்பை நூதன முறையில் தெரிவித்தனர்.
இதற்கிடையே காதல் ஜோடிகளை தாக்கியதாக போலீசாரால் கைது செய்யப்பட்ட 8 சிவசேனா நிர்வாகிகளை அந்த கட்சி மேலிடம் கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.
இதுதொடர்பாக சிவசேனா சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் சிவசேனா ஒரு அரசியல் கட்சி.
எனவே பொதுமக்களுடன் நெருங்கிய உறவு வைத்துக் கொள்ள வேண்டும். இந்தநிலையில் இப்போது நடந்துள்ள செயல் கட்சிக்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று கூறப்பட்டு உள்ளது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்