கனடாவிலிருந்து இந்திய வந்த சைக்கிள் ஓடும் வீரருக்கு அங்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
கனடாவைச் சேர்ந்த சைக்கிள் பந்தய வீரர் சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று மாலை மாயமானார். அவரைத் தேடும் பணியில் சத்தீஸ்கர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கனடா சைக்கிள் வீரர் சத்தீஸ்கரில் மாயம்: நக்சல்கள் கைவரிசையா?
ராய்ப்பூர்:
கனடாவைச் சேர்ந்த சைக்கிள் பந்தய வீரர் ஜான் சிஸ்லசாக் கடந்த 14-ம் தேதி மும்பையிலிருந்து சத்தீஸ்கரில் உள்ள பஸ்டார் மாவட்டத்துக்கு சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.
15 நாட்களுக்குப்பின் நேற்று மாலை சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்திற்கு ஜான் வந்து சேர்ந்துள்ளார்.
அதற்குப்பின் அவரைக் காணவில்லை. நக்சல்கள் நடமாட்டம் நிறைந்த பகுதி என்பதால் ஜானை அவர்கள் கடத்தி சென்றிருக்கலாம் என்ற ரீதியில் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பஸ்டர் போலீஸ் அதிகாரி சுந்தர்ராஜ் கூறுகையில் “அவரது பெயரைத் தவிர வேறு எந்தத் தகவலும் எங்களுக்கு தெரியாது. உண்மையில் நடந்தது என்ன என்பதை அறியும் முயற்சியில் நாங்கள் இறங்கியிருக்கிறோம். அவர் வழியைத் தவறவிட்டாரா? இல்லை யாராவது அவரை கடத்திச் சென்றார்களா? என்ற ரீதியில் விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்