லண்டன் தாக்குதலின் போது தனது உயிரை பணயம் வைத்துள்ள இலங்கை மருத்துவர்
லண்டன் நகரில் இடம்பெற்ற தாக்குதலில் தனது உயிரைப்பற்றி கவலைப்படாது காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை வழங்கிய இலங்கையை பூர்விகமாக கொண்ட மருத்துவர் தொடர்பான செய்தியை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இலங்கையில் பிறந்து பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் அவரின் பெயர் ஜீவாஸ் ஆகும். பிரித்தானிய நாடாளுமன்றம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தாக்குதலை மேற்கொண்டு 3 பேரை தீவிரவாதி கொலை செய்த போது, முதலாவதாக அந்த இடத்திற்கு நெருங்கி உயிராபத்தை கவனிக்காது காயங்கள் ஏற்பட்டவர்களுக்கு குறித்த மருத்துவர் உதவியதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தான் உதவி செய்த இரு நண்பர்கள் உயிரிழந்துள்ளதாக ஜீவாஸ் விஜயசூரிய தெரிவித்துள்ளார். உயிராபத்தை கவனிக்காது செய்த அர்ப்பணிப்பு தொடர்பில் தற்போது அவருக்கு பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும் அவர் தனது டுவிட்டர் கண்ணக்கில் நான் பாதுகப்பாக உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்