இதை வைத்து கடவுளையே கண்டுபிடிக்கலாமாம்! நாசா விஞ்ஞானிகள் தொடர் அதிரடி
பூமியில் இருந்து சுமார் பதினாறு லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்படவுள்ள, உலகின் விலையுயர்ந்த தொலைநோக்கி உருவாக்கம் ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
எட்டு பில்லியன் டாலர் (ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய்) செலவில் உருவாகி வரும் ‘ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொலைநோக்கியை, நாசா கடந்த இரண்டு வருடங்களாக உருவாக்கி வருகிறது.
கண்ணாடிகளுக்குப் பதிலாக, தங்கத்தால் ஆன பதினெட்டு அறுங்கோணங்கள் ஒருசேர பொருத்தப்பட்டுள்ளன. இதன் விட்டம் மட்டும் 6.5 மீட்டர்.
இவை விண் கதிர் களின் ஊடுருவலை தடுக்கிறது. இதன் தங்கப் பரப்பின் மூலம், சூரியனில் இருந்து நட்சத்திரங்கள் பெறும் ஒளியைவிட ஏழு மடங்கு அதிகமான ஒளியைப் பெற முடியுமாம். மேலும் கடும் குளிரை சமாளிக்கும் வகையிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொலைநோக்கி நிலைநிறுத்தப்பட்டால், ‘பிக் பாங் தியரி’ என்று சொல்லப்படும்,
அண்டத்தின் முதல் வெடிப்புக்கான காரணத்தை ஆராய முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். அதாவது, இந்த பேரண்டம் உருவாகுவதற்கு காரணமாக இருந்த கடவுள் துகள் என்னும் முதல் ஒளியைக் கண்டுபிடிக்க முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
‘அந்த முதல் ஒளியே கோள்கள், நட்சத்திரங்கள் அடங்கிய விண்மீன் திரள்கள் உருவாகக் காரணம். அந்த ஒளியை இந்தத் தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்க முடியும். இதன்மூலம் பிரபஞ்சத்தின் உருவாக்கம் பற்றிய பல நம்ப முடியாத, ஆச்சரியம் தரும் தகவல்களைப் பெற முடியும்.
மேலும் விண்மீன் திரள்களின் நடுவே காணப்படும் ‘பிளாக் ஹோல்’ என்ற சந்தேகத்தை இதன் மூலம் தெளிவுப்படுத்த முடியும்’ என்று தொலைநோக்கியின் உருவாக்கத்தில் பணியாற்றிய மைக்கேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் இந்த தொலைநோக்கியை அவ்வளவு எளிதாக விண்ணில் செலுத்த முடியாது. ஏனெனில் ஆடாமல், அசையாமல் பருவநிலைகளுக்கு ஏற்பவே,
இதைப் பாதுகாத்து விண்ணில் செலுத்தவேண்டுமாம். அதனால் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தத் தொலைநோக்கியை விண்ணுக்கு ஏவ திட்டமிட்டுள்ளனர். பூமியில் இருந்து மிக மிக அதிக தொலைவில் நிலைநிறுத்தப்படும் என்பதால், இதில் பழுதுகள் ஏற்படாமல் இருக்க, விஞ்ஞானிகள் மிகக் கவனமாக செயல்பட்டு வருகிறார்கள்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்