Header Ads

பிரச்சினையில் சிக்கியுள்ள ஐக்கிய இராச்சியம்..! இதனால் அங்குள்ள தமிழர்களுக்கு நடக்கபோவது என்ன ?

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதற்கான நடைமுறைகளை அரசாங்கம் தொடங்குவதற்கு வழி வகுக்கும் முக்கிய சட்டம் ஒன்றிற்கு பிரிட்டன் பாராளுமன்றம் தனது கடைசி ஒப்புதலை வழங்கியுள்ள நிலையில், ஸ்கொட்லாந்து ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுதலை வேண்டி புதிய வாக்கெடுப்பை கேட்டுள்ளமை பிரச்சினையை ஏற்படுத்தலாமென தெரிவிக்கப்படுகிறது. 


மேலும் எதிர்வரும் மாதத்திலிருந்து பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு முறையாக வெளியேறுவதற்கான திட்டமிடல்களை ஏற்படுத்துவதற்கான, அந்நாட்டு பாராளுமன்றின் இறுதி ஒப்புதலை பல்வேறு முரண்பட்ட விவாதத்திற்கு மத்தியில் பெற்றுள்ளது. 


இந்நிலையில் பிரிட்டனிலிருந்து விடுதலை பெற்று சுதந்திரமாக செயற்படுவதற்கு, புதிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஸ்கொட்லாந்து முதல் அமைச்சர் நிக்கலோ ஸ்டர்ஜன் அறிவித்துள்ளமையானது, பிரெக்சிட் சட்டவரைபு தீர்மானத்திற்கு எதிரான செயற்பாடாக கருதப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.


அத்தோடு குறித்த தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டர்ஜன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதை ஸ்கொட்லாந்து விரும்பினாலும், ஒன்றியத்தின் பொது சந்தை முறையிலிருந்து ஐக்கிய ராச்சியம் விலகி செயற்படுவதை ஏற்கமுடியாது எனவும், பிரிட்டன் தனது பிடிவாத குணத்தால் இழப்புகளை சந்திக்கவேண்டிய சூழலை உருவாக்கிக்கொள்ளுமென அவர் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.