ஒபாமா திட்டத்துக்கு எதிரான ட்ரம்பின் முதல் மசோதாவே படுதோல்வி: மண் கவ்வியது
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் தேர்தல் பிரசாரத்தின் முக்கிய அம்சமான ‘புதிய சுகாதார மசோதா’ செனட் சபையில் போதிய உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால் தோல்வியடைந்துள்ளது. ஒபாமா அரசின்போது நடைமுறையில் இருந்த ‘ஒபாமாகேர்’ என்ற சுகாதார மசோதாவின் சில பகுதிகளை நீக்கிவிட்டு புதிய மசோதா கொண்டுவருவதே ட்ரம்பின் முக்கிய நோக்கமாகும்.
அமெரிக்க நாடாளுமன்ற இரண்டு அவைகளும் ட்ரம்பின் கையில் இருந்தபோதும் அவரது திட்டம் படுதோல்வி அடைந்தது.மசோதா தோல்வி அடைந்ததற்கு ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள்தான் காரணம் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மக்களிடம் அதிக வரவேற்பு பெறாத இந்தத் திட்ட மசோதா அரசுப் பிரதிநிதிகளாலும் ஏற்கபடாமல் நிராகரிக்கப்பட்டது. குடியரசுக் கட்சியின் ஆட்சியில் ட்ரம்பின் முக்கிய திட்டமாக வெள்ளை மாளிகையிலிருந்து வெளிவந்த முதல் மசோதா தோல்வியடைந்து ட்ரம்ப் அரசின் படுதோல்வியாகவே பார்க்கப்படுகிறது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்