கேப்பபிளவில் மக்கள் கண்ணில் வெடிக்காத நிலையில் வெடி பொருட்கள்! வைத்தது சிங்கள ஆமி தானோ ?
அண்மையில் ஒருமாத கால தொடர் போராட்டத்தின் மூலம் தமது சொந்தக்காணிகளுக்குள் சென்ற கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் தற்போது அவர்களது காணிகளில் ஆபத்து ஏற்படுமென்ற அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
விடுவிக்கப்பட்ட காணிகளில் மற்றும் கிணறுகளில் வெடிக்காத வெடி பொருட்கள் காணப்படுவதாகவும், இதனால் தமது காணிகளை சுத்தப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்வதில் தமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அண்மையில் கூட ஒருகாணியில் துப்பரவு செய்து தீ வைக்கும்போது வெடிபொருள் ஒன்று வெடித்ததாகவும் எவருக்கும் அதனால் தெய்வாதீனமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
தற்போதும் அநேகமானவர்களின் காணிகள் பற்றைகள் சூழ்ந்து காணப்படுவதாகவும், அதனை சுத்தம் செய்வதில் வெடி பொருட்களால் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் உரியவர்கள் தமது அனைவரினதும் காணிகளில் வெடிபொருட்கள் அச்சம் ஏற்படாத வகையில் சுத்தம் செய்து தரவேண்டும் என்று கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்