கும்பலாக இருந்து பரீட்சையில் பிட்டடித்த பொட்டையள்! வெளியான படத்தினால் பெரும் பரபரப்பு!!
உத்தரபிரதேச மாநிலத்தில் 10-ம் வகுப்பு கணக்கு பரீட்சையில் ஒரு பள்ளியில் மாணவ-மாணவிகள் அனைவரும் கூட்டாக உட்கார்ந்து காப்பி அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் கூட்டாக காப்பி அடித்த மாணவர்கள்
லக்னோ:
பீகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் பள்ளி, கல்லூரி தேர்வுகளை முறையாக நடத்துவது இல்லை. அங்கு மாணவர்கள் காப்பி அடிப்பதற்கு பள்ளி, கல்லூரி நிர்வாகங்களே தேவையான உதவிகளை செய்து வருகின்றன. இது சம்மந்தமாக அடிக்கடி செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது கூட பிரதமர் மோடி இதை குறிப்பிட்டு பேசினார்.
உத்தரபிரதேசத்தில் பள்ளி, கல்லூரி தேர்வு முறைகள் முறையாக நடக்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை சீரமைத்து முறையாக நடக்க செய்வோம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி நடந்த 10-ம் வகுப்பு கணக்கு பரீட்சையில் ஒரு பள்ளியில் மாணவ-மாணவிகள் அனைவரும் கூட்டாக உட்கார்ந்து காப்பி அடித்தது தெரியவந்தது. ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தி இதை படம் எடுத்துள்ளனர்.
அந்த காட்சிகள் டி.வி.களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வினாத்தாளில் உள்ள பதில்களை எழுதி அதை கார்பன் காப்பி எடுத்து மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார்கள். அவற்றை மாணவ-மாணவிகள் ஒன்றாக நின்று கொண்டு விடை எழுதினார்கள். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் உட்காராமல் தனியாக எழுந்து வந்து நின்றபடியே தேர்வை எழுதி கொண்டிருந்தனர்.
மாணவ-மாணவிகள் காப்பி அடித்த காட்சி பல்லியா என்ற இடத்தில் உள்ள ஒரு பள்ளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த காட்சிகள் டி.வி.யில் வெளியானதை அடுத்து இதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போதைய மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் 1991-ம் ஆண்டு உத்தரபிரதேச முதல்-மந்திரியாக இருந்தபோது மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுப்பதற்காக தனி அவசர சட்டத்தை கொண்டு வந்தார். அது பின்னர் நடைமுறைக்கு வந்தது. ஆனாலும் அதை பின்பற்றி உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை.
கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு தேர்வுகளில் காப்பி அடித்ததாகவும்,
அதற்கு உதவியதாகவும் 70 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும், காப்பி அடிப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர், அதிகாரிகள் ஆகியோரே இதற்கு உடந்தையாக இருப்பதால் காப்பி அடிப்பது தொடர்கதையாக நடந்து வருகிறது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்