Header Ads

அக்கா தங்கை மர்மமாக மரணம்! கற்பழிப்பு கேசில் இந்த இருவரும் இருப்பது தெரிய வந்தது! நடந்தது என்ன ?

கேரள மாநிலம் பாலக்காடு அருகே அக்காள் - தங்கை மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது கொன்ற உறவினர்கள் 2 பேரை கைது செய்தனர். அக்காள் - தங்கை மர்ம மரணம்: பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் கைது கைது செய்து செய்யப்பட்ட மது, ஷிபு கொழிஞ்சாம்பாறை: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையார் அருகே உள்ள அட்டப்பள்ளத்தை சேர்ந்தவர் ஷாஜி. இவரது மனைவி பாக்கியம். இவர்களுக்கு திருப்தி (வயது 11), சரண்யா (9) ஆகிய இரண்டு மகள்கள் இருந்தனர். 


திருப்தி அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பும், சரண்யா 5-ம் வகுப்பும் படித்து வந்தனர். கடந்த ஜனவரி 13-ந்தேதி திருப்தி வீட்டின் பின்புறம் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அட்டப்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அக்காள் இறந்த 52-வது நாளில் தங்கை சரண்யா அதே இடத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். 


அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சிறுமிகளின் சாவில் மர்மம் உள்ளதாக கூறினர். இதையடுத்து பிரேத பரிசோதனையில் அக்காள், தங்கை இருவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து கூடுதல் எஸ்.பி. பூங்குழலி தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டது. 


தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது அவர்களது உறவினர் மது (வயது 27), பக்கத்து வீட்டை சேர்ந்த ஷிபு (43) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.