கேப்பபிலவு மக்களை கண்காணிக்க ஆமிக்காரர் ரகசியமாக கண்காணிப்பு கேமராவை பொருத்தியுள்ளார்கள்!!!
தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி, போராட்டத்தை முன்னெடுத்துவரும் கேப்பாப்புலவு மக்களைக் கண்காணிக்க, நவீன கமெரா ஒன்று இரகசியமாகப் பொருத்தப்பட்டுள்ளதாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை, கோவில்கள்,
பொதுநோக்குமண்டபம் உள்ளிட்டவை மற்றும் தமது பொருளாதார வளமும், இராணுவத்தால் கையகப்படுத்தபட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கேப்பாப்புலவு கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட பிலவுக்குடியிருப்பு,
சீனியாமோட்டை, சூரிபுரம் ஆகியவற்றை, போராட்டம் மூலம் மக்கள் பெற்றுக்கொண்டனர். இந்நிலையிலேயே கேப்பாப்புலவு மக்கள், தமது பூர்வீக நிலத்தை மீட்கும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த மக்களின் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாக ஒளிப்பதிவு செய்த இராணுவத்தினர், ஊடகங்களில் செய்தி வெளிவந்த நிலையில்,
தாம் வெளிப்படையாக மின்குமிழில் பொருத்திய கமெராவைக் கழற்றி, தற்போது நவீன கமரா ஒன்றை, இரகசியமாகப் பொருத்தி, மக்களை ஒளிப்பதிவு செய்வதாக, மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்