கிரிமினல் ரக்காட் உள்ள நபர் ஈலிங் கோவில் தலைவர் ஆனது எப்படி ? நடந்த சூழ்ச்சி என்ன தெரியுமா ?
ஈலிங் அம்மன் ஆலய நிர்வாக சபையின் தேர்தல் நேற்றைய தினம்(26) நடைபெற்றுள்ளது. இதில் தலைவராக யோக நாதன் என்னும் நபர் தேர்வாகியுள்ளார். ஈலிங் அம்மன் கோவில் சட்ட ரீதியாக ஒரு தொண்டு நிறுவனமாக பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில். அதன் தலைவராக் தேர்வு செய்யப்பட்ட நபர், கிரிமினல் ரக்காட் உள்ள நபர் என்பது பலருக்கு தெரியாத விடையம்.
சில வருடங்களுக்கு முன்னர் உணவு கேட்டு உள்ளே சென்ற இளைஞர் ஒருவரை, பலமாக தாக்கி வெளியே தூக்கி எறிந்துள்ளார் இந்த யோக நாதன் என்னும் நபர். ஒன்று இரண்டு அல்ல . சுமார் 16 தடவை அந்த இளைஞரை ஆக்ரோஷமாக தாக்கி , வெளியே எறிந்த யோக நாதன் என்னும் நபர் எவ்வாறு சாத்வீகமானவர் என்று கருத்தில் கொள்ள முடியும். இவர் மீது சுமத்தப்பட்ட வழக்கு நிரூபணமாகி. இவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். ஒரு நபரை தாக்கும் உரிமை எவருக்கும் இல்லை. அதுவும் பசி என்று வந்து உணவு கேட்ட நபர், எந்த நிலையிலும் இருந்திருக்கலாம்.
பூஜை முடிந்த பின்னர் தான் உணவு தர முடியும் என்று கூறாமல். அவரை சரமாரியாக தாக்கி ஒரு ரவுடியை போல அவரை வெளியே வீசிய யோக நாதன் என்னும் நபரை பொலிசார் கைது செய்தார்கள். சிறையில் அடைத்தார்கள். ஆனால் அவர் இப்போது ஈலிங் அம்மன் கோவில் தலைவராக மாறியுள்ளார். நாளை ஈலிங் அம்மன் கோவில் சார்பாக இவர் எப்படி சென்று அதிகாரிகளை சந்தித்து அல்லது MPக்களை சந்தித்து பேச முடியும் ? பிரித்தானியாவில் கிரிமினல் குற்றம் புரிந்த நபரோடு எந்த அரசு அதிகாரிகளும் தொடர்புகளை பேண மாட்டார்கள் என்று தெரியாதா ? அப்படி இருந்தும் ஆலைய நிர்வாக சபை இவரை எவ்வாறு போட்டியிட அனுமதித்தார்கள் ? பதவி ஆசையும் மோகமும் உள்ள சில நபர்கள் , தமது சொந்த விருப்பு வெறுப்புக்காக இவ்வாறு செய்வது ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையும் பாதிக்கும்.
எனவே உடனடியாக ஈலிங் கோவில் நிர்வாகம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என , தமிழ் மக்கள் பலர் கொரிக்கை விடுத்துள்ளார்கள். அதனை அதிர்வு இணயம் இங்கே வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்