வெளிநாட்டு பெண்ணுக்கு உள்ளூரில் வைத்து மேட்டரை முடித்துவிட்டு, பின்பு செய்த காரியம்!
கோவாவில் உள்ள கடற்கரை பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த அயர்லாந்து நாட்டுப் இளம்பெண் கற்பழிப்புக்குப் பின்னர் கொல்லப்பட்டதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவாவில் கொல்லப்பட்ட அயர்லாந்து நாட்டுப் பெண் கற்பழிக்கப்பட்டதாக அறிக்கை
பனாஜி:
அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் டேனியேல் மெக்லாக்லின்(28). இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற பகுதிகளை சுற்றிப் பார்ப்பதற்காக இங்கு வந்திருந்தார். ரிஷிகேஷ் உள்ளிட்ட வட மாநிலங்களின் பிரபல சுற்றுலா தலங்களை பார்வையிட்ட அவர் சமீபத்தில் இந்தியாவின் கடற்கரை சொகுசு நகரமான கோவாவுக்கு வந்தார்.
கோவாவின் தலைநகரான பனாஜியில் இருந்து தெற்கே சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கனக்கோனா என்ற இடத்தின் அருகே இருக்கும் தேவ்பாக் கடற்கரை பகுதியில் கடந்த 14-ம் தேதி பின்னிரவு நடைபெற்ற மது விருந்தில் கலந்துகொண்ட டேனியேல் மறுநாள் அதிகாலை ரத்த வெள்ளத்தில் முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுதொடர்பான தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார், அந்த பிரேதத்தை கைப்பற்றி கோவா மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூரை சேர்ந்த பிரபல ரவுடியான விகாஸ் பகத் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கொல்லப்பட்ட இளம்பெண்ணின் பிரேதப் பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
அந்தப் பெண் கற்பழிக்கப்பட்டு, பின்னர் கழுத்தை நெறித்துக் கொல்லப்பட்டதாகவும், அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக கொலையாளி அவரது முகத்தை சிதைத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்