Header Ads

கனடா தமிழர்களின் மானத்தை கப்பல் ஏற்றிய கள்ள மட்டை நிருபா: பொலிசாரிடம் சிக்கினார்



கனடாவில் அஜேக்ஸ் மாநகரில் வசித்து வந்த நிரூபா ஜெகதீஸ்வரன் என்னும் பெண், கள்ள கிரெடிட் கார்ட் போட்டு பொலிசாரிடம் மாட்டியுள்ளார். இவர் வேறு நபர்களின் தகவல்கள் அடங்கிய கடன் அட்டையை கொண்டு சென்று, பல கடைகளில் TTC டோக்கன்களை வாங்கியுள்ளார். குறித்த டோக்கன்களை, பின்னர் விற்று காசாக்கவும் முடியும். இவ்வாறு இவர் சில காலம் செய்து வந்த நிலையில். இவரை ரொரன்டோ பொலிசார் குறிவைத்துள்ளார்கள்.

இவரை பின் தொடர்ந்த பொலிசார் கடன் அட்டையை நிரூபா பாவிக்கும் வேளையில் கையும் களவுமாக கைதுசெய்துள்ளார்கள். ஆனால் இவர் ஒரு கருவியாக பாவிக்கப்பட்டுள்ளார் என்றும். இவருக்கு பின்னால் பெரும் கும்பல் ஒன்று உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். அவர்களை தேடி வலைவீசியுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.