Header Ads

இதுவரை சம்பாதித்த பணம் போதாதா? பாடகர்கள் சம்பாதிக்கும் பணம் தான் உனக்கு தேவையா



பஞ்சத்துலையா இருக்கின்றாய் மெல்லிசை பாடகர்களிடம் பணம் கேட்பது கேவலமாக இல்லையா?.. : அண்ணன் இளையராஜாவை திட்டி தீர்த்த கங்கை அமரன்..

இதுவரை சம்பாதித்த பணம் போதாதா? மெல்லிசை பாடகர்கள் சம்பாதிக்கும் பணம் தான் உனக்கு தேவையா ? முன்னுரிமை கேட்க வேண்டும் என்பது கேவலமான விடயம். உனக்கு பணம் வேண்டும் என்றால் நான் தருகிறேன். இப்படி அசிங்கமான வேலை செய்யாதே. எப்போது பாடல்கள் எல்லாம் பொதுமக்கள் இடத்தில் வந்ததோ அது அப்பவே பொதுச் சொத்தாக மாறிவிட்டது. உன்னுடைய பாடல்களை பாடக் கூடாது என்றால் பாடல்களை எல்லாம் ஒரு அலுமாறியில் மூடி அடைத்து விடு. எப்போது தான் திருந்துவாயோ என்று தெரியவில்லை, மெல்லிசை பாடகர்களை பாட வேண்டாம் என்று சொல்ல நீ யார் என இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், இளைராஜாவுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் தன்னுடைய அனுமதி பெறாமல் பாடகர் எஸ்.பி.பி பாடியதால் அதற்கு எதிராக இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இளையராஜாவின் சட்ட எச்சரிக்கை கடிதம் கிடைக்கப்பெற்ற நிலையில், மேடைகளில் படுவதற்குள்ள சட்டங்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும், இருப்பினும் சட்டத்தை மதிக்க வேண்டியது தன்னுடைய கடமை என்பதால் இனி வரும் காலங்களில் இடம்பெறும் மேடைநிகழ்ச்சிகளில் இளையராஜாவின் பாடல்களை தான் பாடப்போவதில்லையென எஸ்.பி.பி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த இளசு கிளட்டு வயசில் கோடி கோடியாக பணத்தை வைத்துக்கொண்டு. மேலும் காசு பணம் சம்பாதிக்க அலைகிறது பாருங்கள் என மக்கள் அவரை திட்டி தீர்த்துவிட்டார்கள். இரே நொடியில் இதுவரை காலமும் சம்பாதித்த நல்ல பெயரை பண ஆசையால் கெடுத்துக்கொண்டார் இந்த இளசு.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.