Header Ads

அமெரிக்காவில் இரவு விடுதியில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு! இதற்கு காரணம் இவர்களா ?

அமெரிக்காவில் இரவு விடுதி ஒன்றில் இன்று அதிகாலை நுழைந்த மர்மநபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலியானார். அமெரிக்கா: இரவு விடுதியில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் பலி வாஷிங்டன்: அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் சின்சினாட்டி நகரில் உள்ள இரவு விடுதி ஒன்றில் வார விடுமுறை தினம் என்பதால் அதிகமானோர் குவிந்திருந்தனர். 


அதிகாலை நேரத்தில் அங்கு நுழைந்த மர்ம நபர் ஒருவர் தான் கொண்டு வந்த துப்பாக்கியால் கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்தினார். இந்த திடீர் தாக்குதலில் விடுதியில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும், அங்கு கூடியிருந்த பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் விஸ்கான்சின் மாகாணத்தில் வங்கி உள்ளே புகுந்த மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் போலிசார் உள்ளிட்ட 4 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி கலாச்சாரம் பெருகியுள்ளது அந்நாட்டு மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.