பிரபாகரன் குழுக்கள் தாக்குகிறார்கள்: திருப்பி தாக்க தயாராக உள்ள மகிந்த
பிரபாகனின் குழுக்கள் இன்று தாக்குகின்றன ஆனால் அவற்றை எதிர்கொள்ள மகிந்த ராஜபக்ச தயார் நிலையிலேயே இருக்கின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். காலி நகரில் இன்று இடம் பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
பிரபாகரனைச் சார்ந்த குழுக்களும், தமிழ் பிரிவினைவாதிகளும் புலம்பெயர் தமிழர்களும், தனியார் அமைப்புகளும் ஒன்றாக இணைந்துள்ளனர். அப்படி இணைந்தவர்கள் இலங்கை இராணுவத்தையும், புலனாய்வு அதிகாரிகளையும், மகிந்த ராஜபக்சவையும் தொடர்ச்சியாக தாக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் அவ்வாறான தாக்குதல் எதனையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் திருப்பித் தாக்கி வெற்றி கொள்ள மகிந்த ராஜபக்ச தயாராக இருக்கின்றார்.
அப்படியான ஒரு தலைவர் மீண்டும் ஆட்சியை அமைக்க நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டியது நமது கடமையாகும் என்றால் அவர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்