தொலைக்காட்சி நேரலையில் குழந்தைகளினால் ஏற்பட்ட விபரீதம்! ( வீடியோ இணைப்பு)
பிரபல தனியார் தொலைக்காட்சி நேரலையின் போது குழந்தைகள் இருவர் குறுக்கிட்ட சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தென்கொரிய அதிபர் குறித்த செய்திக்காக பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அந்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் கெல்லி என்பவர் நேரலையில் இணைந்திருந்தார்.
அவர் தொடர்ந்து பேட்டி அளித்துக் கொண்டிருந்த போது, திடீரென அவரது பெண் குழந்தை ஒருவர்,அங்கு நேரலை பேட்டி எடுத்துக் கொண்டிருப்பது தெரியாமல் அறைக்குள் நடனமாடிக் கொண்டே நுழைந்தார்.
இதை அறிந்த ராபர்ட் உடனடியாக அக்குழந்தையை தடுத்து நிறுத்தினார்.அதனை தொடர்ந்து அவரது மற்றொரு குழந்தை,தன்னுடைய நடைபயிற்சி கருவியுடன் தத்திக் கொண்டே அந்த அறைக்குள் நுழைந்தது.ஆனால் ராபர்ட் தனது பேட்டியை தொடர்ந்து கொண்டிருந்தார்.
இதனை கண்ட வீட்டு பணிப்பெண் ஒருவர்,
அதிர்ச்சியாகி இரண்டு குழந்தைகளையும் அந்த அறையிலிருந்து வெளியே அழைத்துச் சென்றார்.
இந்த காட்சிகள் அனைத்தும் அப்படியே நேரலையில் ஒளிபரப்பானது. தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளதால், இரண்டு குழந்தைகளும் பிரபலமாகி வருகின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்