தரையிறங்கும் போது நேர்ந்த பயங்கர விபத்து!! விமானத்தில் தீப்பிடித்து விமானி பயங்கர சாவு
பாங்காக்- டெல்லியை அடுத்துள்ள குர்கானில் மெடந்தா மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் விமானம், டெல்லியில் இருந்து தாய்லாந்து நாட்டின் பாங்காக்கிற்கு நேற்று மாலை புறப்பட்டு சென்றது.
அங்குள்ள ஒரு நோயாளியை ஏற்றி வருவதற்காக சென்ற அந்த விமானத்தில் 2 டாக்டர்கள், ஒரு நர்ஸ் உள்பட 5 பேர் பயணம் செய்தனர்.
பாங்காக் அருகேயுள்ள நாகோன் பதோம் விமான நிலையத்தில் நேற்றிரவு தரையிறங்க முயன்ற போது விமானத்தில் திடீரென தீப்பிடித்து புகை கிளம்பியது. விமானத்தில் இருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அலறினர்.
தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர் தீயை அணைத்து விமானத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த தீ விபத்தில் விமானி அருணாக்சா நந்தி பரிதாபமாக உயிரிழந்தார். தீக்காயம் அடைந்த மற்ற 4 பேர் உடனடியாக ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்