உக்ரெய்னின் நாட்டில் நடந்த உக்கிரம்!! ஆயுதக் கிடங்கில் நடந்த சம்பவத்தை பாருங்கள்
கிழக்கு உக்ரெய்னில் பாரிய ஆயுதக் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தொடர் வெடிவிபத்தால், அப்பகுதியைச் சுற்றிலும் வாழும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
பலக்லியா என்ற நகரில், சுமார் 350 ஹெக்டெயர் பரப்பளவில் பரந்து உள்ள இந்த ஆயுதக் கிடங்கில், ஆட்லறி உள்ளிட்ட பாரிய ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளன.
விபத்தையடுத்து அப்பகுதியில் கடும் தீ மூட்டமும் வெடிச் சத்தங்களும் கேட்டவண்ணமுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரெய்னில் பிரிவினைவாதிகள் செறிந்து வாழும் பகுதிக்கு சுமார் அறுபது கிலோ மீற்றர் தொலைவிலேயே இக்கிடங்கு அமைந்திருப்பதால்,
இவ்விபத்து ஒரு நாசவேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு இந்த ஆயுதக் கிடங்குக்கு தீ வைக்க முயன்றவர்கள் சிலர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்