Header Ads

அமெரிக்காவை ஆட்டிபடைக்கும் பனிப்புயல்! மக்களே மிகுந்த அவதானமாக இருங்கள்

அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையை நோக்கி நகரும் பனிப்புயலையடுத்து, சுமார் 7,600 விமானச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. மேலும், சுமார் 31 மில்லியன் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. 


மேலும், பாதிக்கப்பட்ட இடங்களில் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்து போயுள்ளது. வடகிழக்குப் பருவ மழைக் காலமான தற்போது, அமெரிக்காவில் எதிர்பாராத விதமாக பனிப்புயல் உருவாகியுள்ளது. இதனால், அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் பனிப்புயல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான பாடசாலைகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. அபாயகரமான இந்தச் சூழலால் பல்லாயிரக்கணக்கான விமானச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. மணிக்கு ஐம்பது முதல் அறுபது கிலோமீற்றர் வேகத்தில் பனிப்புயல் வீசும் என்பதால்,


எதிரில் தோன்றும் காட்சிகள் கண்களுக்கு முற்றிலும் தெரியாமல் போகலாம். இதனால், கூடியவரையில் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பனிப்புயல் கிழக்குக் கடற்கரையோரத்தை முழுமையாகத் தாக்குமிடத்து, நியூயோர்க், போஸ்டன் ஆகிய நகரங்களில் பனிப்பெருக்கு ஏற்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.