பிரிட்டனில் படிக்கும் தமிழ் யுவதியை நாடு கடத்தும் நடவடிக்கைக்கு ஆப்பு
பிரிட்டனில் படிக்கும் தமிழ் யுவதியை நாடு கடத்தும் நடவடிக்கைக்கு ஆப்பு. ஈழ தமிழ் மாணவி ஷிரோமினி சற்குணராஜாவை நாடு கடத்துகின்ற நடவடிக்கையை பிரித்தானியா கடைசி மணித்தியாலங்களில் நிறுத்தி உள்ளது. நோர்த் வேல்ஸில் உள்ள பங்கொர் பல்கலைக்கழகத்தில் பொறியியலாளர் பட்ட படிப்பு படிப்பவர் இவர்.
இவர் படிப்பை நிறைவு செய்ய 03 மாதங்களே உள்ளன. இந்நிலையில் இவரின் மாணவர் விசா கோரிக்கையை உள்நாட்டு அமைச்சு கடந்த வாரம் நிராகரித்தது. தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டு யார்ள்ஸ் வூட் தடுப்பு முகாமில் போடப்பட்டு இருந்தார். இன்று நாடு கடத்தப்படுவதாக இருந்தார். இவரை விமானத்தில் ஏற்றுகின்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆனால் ஹைவெல் வில்லியம்ஸ் எம். பி நாடாளுமன்றத்தில் இவரின் பிரச்சினையை எடுத்து பேசியதை அடுத்து நாடு கடத்துகின்ற நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
அத்துடன் இவரும், அம்மாவும் தடுப்பு முகாமில் இருந்து வரும் நாட்களில் விடுவிக்கப்படுகின்றனர். போரால் பாதிக்கப்பட்ட நிலையில் இவரின் பெற்றோர் பிரிட்டனுக்கு புலம்பெயர்ந்து வந்திருந்தனர். அப்போது இவருக்கு 12 வயது. இவர் தந்தையின் விசாவிலேயே சார்ந்து இருக்க படிக்க நேர்ந்தது. ஆயினும் தந்தை 2011 ஆம் ஆண்டு இறந்து போனார். இதை அடுத்தே சட்ட பிரச்சினைகள் தோன்றின என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மனிதாபிமான அடிப்படையில் நாடு கடத்தப்பட கூடாது என்பதை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டன.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்