Header Ads

கல்யாணம் கூட நடக்கவிருந்தது! அதற்கு முன்பாகவே இந்த இருவருக்கும் நேர்ந்த கோரச் சம்பவம்! இலங்கையில் பயங்கரம்

திருமணம் செய்வதற்கு சில நாட்களே இருந்த நிலையில், இளம் காதல் ஜோடி ஒன்று நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளனர். மீகாஹதென்ன - நெலுஹேன 6 தூண் பிரதேசத்தில், ஹோரவல திசை நோக்கி பயணித்த மோட்டர் சைக்கிளொன்று எதிர் திசையில் வந்த பாரவூர்தியில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 


விபத்தில் படுகாயமடைந்த இளைஞர், ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், யுவதி நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள் பெலவத்தை கோரகதுவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான ஜனக என்ற இளைஞரும், கும்பதுவ பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான சகுரா என்ற யுவதியும் என தெரியவந்துள்ளது. குறித்த யுவதி தனியார் வகுப்பொன்றுக்கு சென்று தனது காதலனுடன் மீண்டும் வீடு திரும்பிய போதே இந்த கோர சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


சடலங்கள் தற்போது நாகொட வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது. விபத்து தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மீகாஹதென்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.