ஆப்கானிஸ்தான் இன்று நடந்த கோர சம்பவம்!! தற்கொலை தாக்குதல் என்றுதான் சொல்கிறார்கள்!
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பிராந்திய மாகாணமான கோஸ்ட்டின் இராணுவ முகாமுக்கு அருகில் கார்க் குண்டு ஒன்று வெடித்ததில் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். குண்டுவெடிப்பையடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வீரர்கள் பலர் காயமடைந்தனர்.
எனினும், இராணுவ வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் நால்வரும் கொல்லப்பட்டனர்.
முகாமுக்கு ஐம்பது மீற்றர் தொலைவில் இடம்பெற்ற இந்த குண்டுவெடிப்பினால் அப்பகுதியில் உள்ள பல வீடுகள், கடைகள், பாடசாலைகள் பாதிக்கப்பட்டன.
கடந்த வாரம்,
இதே கோஸ்ட் மாகாணத்தில் அமைந்துள்ள விமானப் படை முகாமிலும் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இத்தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்