நைஜீரியாவில் மனித வெடிகுண்டு தாக்குதலில் இடம்பெற்ற கோர சம்பவம்! யார் பொறுப்பு கூறப்போவது ?
நைஜீரியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள மைடுகுரி நகரின் அருகே மூன்று தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
பலர் காயம் அடைந்தனர்.
வடகிழக்கு நைஜீரியாவில் மனித குண்டு தாக்குதலுக்கு 7 பேர் பலி
கோப்பு படம்
மைடுகுரி:
கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் சமஅளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போக்கோஹரம் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள்,
அங்குள்ள மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கின்றனர்.
வடக்கு நைஜீரியாவில் உள்ள சில சிறிய நகரங்களை கைப்பற்றியுள்ள போக்கோஹரம் தீவிரவாதிகள், தற்போது, வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரான மைடுகுரியை கைப்பற்றும் நோக்கத்தில் அவ்வப்போது இப்பகுதியில் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இவர்களின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களுக்கு இதுவரை 15 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிர் பயத்தில் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறி, வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மைடுகுரி நகரின் அருகே போக்கோஹரம் அமைப்பை சேர்ந்த மூன்று தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
பலர் காயம் அடைந்தனர்.
மைடுகுரி நகரில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள உமரிரி கிராமத்துக்குள் நுழைந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் மூன்று பேரும் தங்களது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் அந்த கிராமத்தை சேர்ந்த இரு குழந்தைகள், ஒரு பெண் உள்பட நான்கு பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர், பலர் காயம் அடைந்தனர்.
காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்