Header Ads

தூங்குவதற்கு 9 லட்சம் பணம் கொடுக்கும் ஒரே சீனக் கம்பெனி இவர்கள் தான் தெரியுமா ?

சிலருக்கு வேலையிடத்திற்குச் சென்றால் தூக்கம் வந்து விடும். ஆனால் தூங்குவதே வேலை என்றால்? கசக்குமா அதுவும் அந்தப் பணியை சிறப்பாகச் செய்தால் ஆண்டிற்கு $20,000 வெள்ளியை ஈட்டலாம். எங்கே இருக்கு? அந்த நிறுவனம் எனப் பலரும் கேட்பது புரிகிறது.


பிரபல சீன உடல்நல ஊட்டச்சத்து நிறுவனமான ‘நாவ் பாய்ஜின்’ இந்த 'அரிய' வாய்ப்பை வழங்குகின்றது. சீன இணையவாசிகளால் ‘உலகின் மிக சொகுசான வேலை’ என்ற பாராட்டை இது பெற்றுள்ளது. இந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நிறுவனத்தின் பொருட்களைச் சோதிக்கத் துணைபுரிவார்கள். ஊட்டச்சத்துப் பொருளை உட்கொள்வது, தூக்கத்தின் தரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


என்பதைச் சோதிக்க வேண்டும்; பின்னர், அது குறித்த அறிக்கையை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வேலை இப்போது பிரபலமடைந்து வருகிறது. அதற்குக் காரணம், தற்போதைய பரபரப்பான உலகில் பலரும் முறையாகத் தூங்குவதில்லை. தூக்கமின்மையால் அவதியுறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனைத் தொடர்ந்தே தூக்கத்தைச் சோதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது மருத்துவ உலகம்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.