இன்று முதல் ஆக்பானிஸ்தான் போல லண்டனிலும் ட்ரோன் விமானம் வானில் 24 மணி நேரம்
லண்டன் பாராளுமன்றம் முன்பாக இன்று நடைபெற்ற தாக்குதலை அடுத்து. பல முக்கிய இடங்களுக்கு மேல் 24 மணி நேரமும் ஆளில்லா விமானங்கள் பறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மெற்றோ பொலிடன் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். வானில் இருந்து கண்காணிக்கும் நடவடிக்கை அதிகரித்துள்ள நிலையில்.
ஆயுதம் தாங்கிய அதிரடிப் படையினரும் லண்டனில் களம் இறக்கப்பட்டுள்ளார்கள். ஆக்பானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் தீவிரவாதிகளை கண்காணிக்க எவ்வாறு 24 மணி நேரமும் ஆளில்லா விமானங்கள் பறப்பில் ஈடுபடுகிறதோ. அது போன்ற நடவடிக்கையே தற்போது லண்டனிலும் நடக்க உள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்