Header Ads

டொனால் ரம்பின் 1.2 மில்லியன் கார்: என்ன வசதி உள்ளது என்று கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்



அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள, செல்வந்தரான டொனால் ரம். தனது சொந்த செலவில், தனது காரை வடிவமைத்துள்ளார். உலகிலேயே அதி பாதுகாப்பு கூடிய கார் இதுவாகதான் இருக்க முடியும். வெளியே பிரளையமே நடந்தாலும் உள்ளே இருப்பவர்கள் பாதிக்காத வகையில் இந்த கார் அமைக்கப்பட்டுள்ளது. சரி அப்படி என்ன வசதிகள் உண்டு என்று பார்க்கலாமா ?

காரின் கண்ணாடிகள் சுமாட் 6 இஞ்சி தடிப்பனானவை.

மற்றும் எந்த ஒரு துப்பாக்கி குண்டும் அதனை துளைக்காது. அதுபோக முழு காருமே குண்டு துளைக்காத கவசம் பொருந்தியது.

காரின் டயரை சேதப்படுத்த முடியாது. அப்படியே அது சேதப்படுத்தப்பட்டால். கார் ரிம்மில் ஓடக் கூடியது(ரயரே தேவை இல்லை)

குறித்த இந்த காருக்குள், எந்திர துப்பாக்கிகள் உள்ளது. அதுபோக ரம் அமர்ந்திருக்கும் பக்கம் , அமெரிக்க பாதுகாப்பு சேவையோடு மற்றும் அமெரிக்க உப ஜனாதிபதியோடு உடனே தொடர்பு ஏற்படுத்த கூடிய தொலைபேசி உள்ளது.

காருக்குள் ஆக்சிஜன் சிலிண்டர் இருப்பதனால் வெளிக்காற்றை சுவாசிக்கவேண்டிய அவசியம் இல்லை.

காரில் இருக்கும் பெற்றோல் டேங் கூட உள்ளே தான் உள்ளது. இதனால் அதுவும் பாதுகாக்கப்படுகிறது.

மேலும் காரில் இருந்து வெளியே டியர் காஸை பீச்சியடிக்கும் வசதி உள்ளது. இதனால் காருக்கு அருகே எவராலும் வர முடியாது.

காருக்கு கீழே குண்டு வெடித்தால், அதனை தாக்கு பிடிக்க கூடிய உலோகம் உள்ளது.

வேறு வாகனங்களால் வந்து இடித்தால் கூட, அதனை தாங்கும் அளவு எல்லா இடங்களிலும் உலோகங்கள் உள்ளது

அதுபோக GPS ரக்கிங்,

வாகனத்தை ஓட்டும் சாரதியின் கண்ணாடி 5 அடுக்குகளை கொண்டது. எனவே முன்னால் இருந்து யார் சுட்டாலும் காரை பயப்பிடாமல் ஓட்டலாம்.

எனவே 100 பேர் செர்ந்தாலும் ஒன்றுமே செய்ய முடியாது.  அப்படியான காரில் தான் டொனால் ரம் பயணம் செய்கிறார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.