வவுனியாவில் பல்கலைக் கழகம்! சிவசக்தி ஆனந்தன் அதிரடி அறிவிப்பு!
வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்தும் முகமாக நாளை மறுதினம் (28) காலை 10.00 மணிக்கு, வவுனியா – குருமன்காட்டில், எதிர்ப்புப் பேரணி நடைபெறவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அறிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
“யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை, வன்னிப் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த வேண்டும் என்பது, வன்னிவாழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கை. இதுகுறித்து நாம், நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து உரையாற்றி வந்துள்ளோம்.
"22ஆம் திகதி, நாடாளுமன்றத்தில் பல்கலைக்கழகத் திருத்தச்சட்டமூல விவாதத்தில்,
வன்னிப் பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து உரையாற்றியபோது, உயர்கல்வி அமைச்சர் அதற்கான சம்மதத்தை தெரிவித்திருந்தார்.
"இந்தநிலையில் பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி, கவனயீர்ப்புப் பேரணி நடத்தப்படவுள்ளது.
வன்னிக்கென்று தனியான பல்கலைக்கழகம் அமைய வேண்டும் என்பதில், நாம் அனைவரும் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளோம் என்பதை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. எமது எதிர்கால சந்ததிகள், எமது பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்று,
உலகுக்கு எடுத்துக்காட்டாகத் திகழவேண்டும் என்பதே நம் அனைவரினதும் எதிர்பார்ப்பாகவும் வேண்டுதலாகவும் இருக்கின்றது.
"ஆகவே,28ஆம் திகதி காலை 10.00 மணிக்கு குருமன்காட்டிலிருந்து ஆரம்பமாகும் கோரிக்கை பேரணியில், வன்னியைச் சேர்ந்த அனைவரும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகிறோம்” என்றார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்