லண்டனில் றொமேனியர்கள் மீது காரை ஏற்றி 5 பேரைக் கொல்ல நினைத்த நபர் யார் ?
லண்டனில் கார் கழுவும் றொமேனியர்கள் ஐவர் மீது காரை ஏற்றியுள்ளார் ஒரு நபர். குறித்த 5 பேரும் வீதி ஓரத்தில் கார்களை கழுவி பணம் சம்பாதிக்கும் நபர்கள் ஆவர். இவர்கள் நேற்றுக் காலை 8.30 மணி அளவில் கார்களை கழுவ ஆயத்தம் செய்து கொண்டு இருந்துள்ளார்கள்.
அங்கே படு வேகமாக வந்த கார் ஒன்று, அவர்கள் மீது மோதி 5 பேரையும் காயப்படுத்தியுள்ளது. இதில் ஒருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். அடிபட்டவர்களில் ரத்தக் காயங்களோடு , ஒரு நபர் ஓடிச் சென்று காரில் உள்ள நபரை முதலில் பிடித்துள்ளார். வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்த பொலிஸ்காரர் ஒருவர், சம்பவத்தை பார்த்ததும் அங்கே சென்று வாகன ஓட்டுனரைக் கைதுசெய்துள்ளார்.
பின்னரே பொலிசார் வந்துள்ளார்கள் என்றும். குறித்த வாகன சாரதி அதி மிஞ்சிய மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் தெரிவிக்கையில். அவர் வேண்டும் என்றே இவ்வாறு வந்து மோதியதாக தெரிவித்துள்ளார்கள்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்