அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் பார்த்த வேலை! இதனால் அவருக்கு ஏற்பட்ட சோகம்
அமெரிக்காவில் வெடி குண்டு மிரட்டல் விடுத்த இந்திய தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் வெடிகுண்டு மிரட்டல்: இந்திய தொழிலதிபர் கைது
நியூயார்க்:
குஜராத்தை சேர்ந்த தொழில் அதிபர் பரமன் ராதாகிருஷ்ணன் (53). இவர் வர்த்தகம் தொடர்பாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு ஒரு வாரம் தங்கியிருந்தார்.
இந்தியா திரும்ப வடக்கு டகோடாவில் இருந்து மின்னே பொலிஸ் நகருக்கு விமான பயணம் மேற்கொண்டார். அதற்காக கிராண்ட் போர்க்ஸ் சர்வதேச விமான நிலையத்துக்கு கடந்த 28-ந் தேதி காலை 5 மணிக்கு வந்தார்.
விமான நிலையத்தில் அவரது பேக்கை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ஏனெனில் டிராவல் ஏஜெண்ட் ஒருவர் அவரது ‘பேக்’கில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
‘கிராண்ட் போர்க்‘ மண்டல வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
அந்த விமான நிலையத்தில் இருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டனர். சிறிதுநேரம் அங்கு பணிகள் நிறுத்தப்பட்டன.
இருந்தும் சோதனையின் போது வெடிகுண்டுகளோ அல்லது அபாயத்தை ஏற்படுத்தும் பொருட்களோ எதுவும் இல்லை. இருந்தும் அவர் கைது செய்யப்பட்டார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும், தொழில் அதிபர் ராதாகிருஷ்ணனின் மனைவி மத்திய வெளியுறவுதுறை மந்திரி சுஷ்மா சுவராஜிடம் தொடர்பு கொண்டு தனது கணவர் குற்றமற்றவர். எனது கணவரை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது படேல் உள்ளிட்டோரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். அதைதொடர்ந்து இது குறித்த அறிக்கை தரும்படி அமெரிக்காவில் உள்ள இந்திய தூதருக்கு சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டுள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்