தேவா- பிரசன்னா வழிநடத்த வாள்வெட்டு அட்டாக்: அதிரும் உண்மை சம்பவம் வெளியாகியது தெரியுமா
நல்லுாரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் மன்னாரில் இருந்து வந்த தனஞ்சயன் மற்றும் நிசா என்ற இருவருமே முக்கிய நபர்களாக செயல்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இவர்கள் இருவரும் தேவா மற்றும் பிரசாத் ஆகியோரின் கூட்டாளிகள் எனவும் தெரியவருகின்றது. தேவா மற்றும் பிரசாத் ஆகியோர் ஆவா குறுப் எனக் கூறப்படும் குழுவில் செயற்பட்டு பல கொலைகள் மற்றும் வாள் வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்பதும்.
பல முக்கிய வழக்குகளில் இவர்களுக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. குறித்த இருவரும் மன்னாரில் தற்போது பதுங்கியிருந்து இந்தியா செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர் என இரகசியத் தகவல்கள் அதிர்வுக்கு கசிந்துள்ளது. தேவா மற்றும் பிரசாத் ஆகியோரின் கட்டளைகளுக்கு அமைவாகவே மன்னாரில் இருந்து வந்த தனஞ்சயன் மற்றும் நிசா ஆகியோர் யாழ்ப்பாணத்தில் இருந்த தமது கூட்டாளிகளை சேர்த்துக் கொண்டு அரசடிப்பகுதியில் வாள் வெட்டுச் சம்பவத்தை மேற்கொண்டவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் குழுவில் முக்கிய உறுப்பினராக முன்னர் இருந்த பிரசன்னா என்பவன் மன்னாரில் இருந்து கள்ளப் படகு மூலம் இந்தியா சென்று தற்போது அங்கிருந்து சுவிஸ் நாட்டுக்குச் சென்று விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்