பிரபல சவுதி தூதரக அதிகாரிக்கு பிரம்பால் அடித்து நொறுக்கு உத்தரவு! ஏன் தெரியுமா பெண்களின் அங்கங்களை ....
ஹோட்டல் பணிப்பெண் ஒருவரை பலவந்தப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், சவுதி தூதரக அதிகாரியொருவருக்கு சிங்கப்பூர் அரசு நான்கு பிரம்படியும் 26 மாத சிறைத் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.
சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள சவுதி அரேபிய தூதரக அதிகாரி பாந்தர் யெஹியா ஏ.அல்ஸஹ்ரானி (39). இவர் கடந்த வருடம் விடுமுறையைக் கழிக்கும் முகமாக சிங்கப்பூர் சென்றிருந்தார்.
அப்போது அவர் தங்கியிருந்த ஹோட்டலில் பணிபுரியும் பெண் ஒருவரை பலவந்தப்படுத்த முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் பாந்தர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட பாந்தருக்கு நான்கு பிரம்படிகளும் 26 மாத சிறைத் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து பாந்தர் மேன்முறையீடு செய்யவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்