சுமந்திரனை போட்டுதள்ளப்போவது இவர்களா ? அதிர்ச்சி....
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை மீண்டும் அமுல்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. அதனை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆதரிக்கின்றமையினாலேயே தமிழ் பிரிவினை வாதிகள் அவரை கொலை செய்ய முயற்சிக்கின்றனர் என தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் வசந்த பண்டார தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளி னால் நாடு பிளவுபட்டு மிகப் பெரிய அச்சுறுத்தலை சந்திக்க போகின்றது. நாட்டில் சமஷ்டி ஆட்சியும் உருவாகி விடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தேசிய நூலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்,
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒருபுறத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வஜன வாக்கெடுப்பு வேண் டாம் என்கிறார். ஐக்கிய தேசியக் கட்சி வேண்டும் என்கிறது. ஆனால் இது அரசியலமைப்பினை 3 இல் 2 பெரும்பான்மையை பெற்று நிறைவேற்றிக் கொள்வதற்கான நாடகம் என்றே நாம் பார்க்கின்றோம்.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் 13 ஆவது திருத்தத்தினை வலுப்படுத்தினால் அதனை ஏற்றுக் கொள்ள தாங்கள் தயார் என்ற நிலைப்பாட்டில் உள்ளார். அதனால் கடுமை யாக தமிழ் இனவாதம் பேசுகின்றவர்கள் அவரை கொலை செய்ய முயற்சிக்கின்றனர்.
மறுபுறத்தில் சுதந்திரக் கட்சியில் உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அணியும் கூட தற் போது 13 ஆவது திருத்தத்தினை மீண்டும் உயிர்ப்பித்து மாகாண சபைக்கான காணி, பொலிஸ் மற்றும் நிதி கையாளுகைக் கான அதிகாரங்களை முதலமைச்சர்கள் வசமாக்க ஆதரவாகவே உள்ளது.
இதனால் நல்லா ட்சி அரசாங்கம் தமிழ் பிரிவினை வாதிகளை முழுமையாக திருப்தியடையச் செய்ய முயற்சித்து வருகின்றது.
அதனால் தான் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சிங்களவர்களை புதிய அரசியலமைப்பின் ஊடாக மண்டியிட வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ போரில் தமிழ் மக்களை கொன்று குவிக்க வில்லை. மாறாக தீவிரவாதிகளையே கொன்றார். எனவே அதற்காக சிங்கள மக்க ளை குறை கூறுவது அர்த்தமற்றதாகும்.
யார் என்ன கூறினாலும் மாகாண சபைகளின் அதிகாரங்களை வலுப்படுத்தி ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினை குறைத்து மறுபுறத்தில் திட்டமிட்ட வகை யில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அரசியல் வாழ்க்கையை அஸ்தமனமாக்கும் முயற்சியில் நல்லாட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
அதனால் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் தொடக்கம் சகல விதமான கோரிக்கைகளும் தமிழ் பிரிவினை வாதிகளுக்கு மீள வழங்கப் படப் போகின்றன. அதனால் புதிய அரசி யலமைப்பினால் தேசம் மிகப் பெரிய அச் சுறுத்தலை எதிர் கொள்ள போகின்றது என் றார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்