அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; ஐந்து வயது ஈரானியச் சிறுவன் தடுத்து வைப்பு!
ட்ரம்ப்பின் குடிவரவு உத்தரவையடுத்து, பாதுகாப்புக் காரணங்கள் கருதி ஐந்து வயது ஈரானியச் சிறுவனை அதிகாரிகள் தடுத்து வைத்த சம்பவம் வொஷிங்டன் விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தைச் சேர்ந்தவன் இந்தச் சிறுவன். அங்கிருந்து, தனது உறவினர் ஒருவருடன் வொஷிங்டனில் உள்ள டல்லஸ் விமான நிலையத்துக்கு வந்திறங்கினான். அங்கு அவனை விசாரித்த விமான நிலைய அதிகாரிகள், அவன் அமெரிக்க குடிமகனுக்கான ஆதாரங்களை வைத்திருந்தபோதும், ஈரானிய முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற காரணத்தினால் தடுத்து வைக்கப்பட்டான்.
சிறுவனை வரவேற்கவென டல்லஸ் விமான நிலையத்துக்கு வெளியே காத்திருந்த அச்சிறுவனின் தாய் இதையறிந்து பதைபதைத்துப் போனார்.
ஒரு சில மணி நேரங்களின் பின் அச்சிறுவன் அவனது தாயிடம் ஒப்படைக்கப்பட்டான்.
இச்சம்பவம் குறித்துப் பேசிய விமான நிலைய அதிகாரிகள், அமெரிக்காவின் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஜனாதிபதி ட்ரம்ப்பின் உத்தரவைக் கடைப்பிடித்தே ஆக வேண்டும் என்பதன் பேரிலேயே அச்சிறுவன் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்