Header Ads

ஒரே வருடத்தில் இத்தனை கோடிகளை அசால்ட்டாக ஆட்டயபோட்ட கில்லாடிகள்!

இணையதள நிறுவனம் என்ற பெயரில் ஒரே வருடத்தில் சுமார் ஆறரை இலட்சம் பேரை ஏமாற்றி, சுமார் எட்டாயிரம் கோடி ரூபா மோசடி செய்த மூன்று பேரை உத்தரப் பிரதேச விசேட அதிரடிப்படை பொலிஸார் கைது செய்துள்ளனர். அனுபவ் மிட்டல், ஸ்ரீதர் பிரசாத் மற்றும் மகேஷ் தயாள் ஆகிய மூவரே கைது செய்யப்பட்டவர்களாவர். 


‘சோஷல்ட்ரேட்.பிஸ்’ (socialtrade.biz) என்ற பெயரில் ஒரு இணையதளத்தை ஆரம்பித்து, அதன்மூலம் தமது இணையதளத்தில் முதலீடு செய்யும்படி விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களைத் திரட்டியிருக்கிறார்கள். ‘பத்தாயிரம் ரூபா முதல் ஒன்றே கால் இலட்ச ரூபா வரை செலுத்தி இந்தத் தளத்தில் உறுப்பினராகலாம். உறுப்பினரானதும் இந்தப் போலி இணையதளம் அனுப்பும் லிங்க்குகளை க்ளிக் செய்ய வேண்டும். 


ஒவ்வொரு க்ளிக்குக்கும் பத்து ரூபா கிடைக்கும்’ என்று கூறியே மக்களை மோசடி வலையில் சிக்க வைத்துள்ளனர் இந்த சந்தேக நபர்கள். என்றபோதும், தவறான அல்லது போலியான லிங்க்குகளையே உறுப்பினர்களுக்கு இந்தச் சந்தேக நபர்கள் அனுப்பிவைத்துள்ளனர். மேற்படி மூவரையும் கைது செய்த பொலிஸார், அவர்களது வங்கிக் கணக்கில் இருந்த சுமார் ஆயிரம் கோடி ரூபாவையும் முடக்கியுள்ளனர். மேலும் சில ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான ஆவணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.