பிலிபைன்சில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட ஜேர்மன் பிரஜை: 500,000 கேட்ட ஐ.எஸ்
பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை ஒருவரை, அங்கு இயங்கி வரும் ஐ.எஸ் குழு ஒன்று கடத்தியுள்ளது. 70 வயதாகும் முதியவரை கடத்தி, ஜேர்மன் அரசிடம் சுமார் 500,000 ஆயிரம் பவுண்டுகளை தரும்படி கேட்டுள்ளது ஐ.எஸ் அமைப்பு. ஆனால் ஜேர்மன் தூதுவர் அதனை மறுத்துவிட்டார். இன் நிலையில் அவரை ஒரு அடர்ந்த காட்டில் வைத்து, கைகளை கட்டி கத்தியால் அவர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்கள் அன் நாட்டில் இயங்கி வரும் ஐ.எஸ் அமைப்பினர்.
இதனை வீடியோவாக எடுத்து இன்ரர் நெட்டில் வெளியிட்டுள்ளார்கள். ஆண்டு தோறும் பல லட்சக்கணக்கான் மக்கள் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சுற்றுலா செல்வது வழக்கம். இன் நிலையில் அன் நாடு தற்போது பெரும் ஆபத்துக்களை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்