ஹனுமன் அர்சுணனோடு போர்- ராமாயணம் மற்றும் மகாபாரத்திற்கு என்ன தொடர்பு தெரியுமா
மகாபாரதம் தோன்றுவதற்கு முன்னரே ராமாயணம் தோன்றிவிட்டது என்பது சரியான தகவல் தான் என்கிறார்கள். காரணம் என்னவென்றால் பலருக்கு தெரியாத விடையம் ஒன்று உள்ளது. ராமாயணத்தில் ராம பக்த்தனாக வரும் சிமபெருமான் திருவுருவமான ஆஞ்ச்சனேயர்(ஹனுமன்) மகாபாரதத்திலும் தோன்றியுள்ளார் என்பது தான். ஹனுமனை சிரஞ்சீவி என்றே அழைப்பார்கள். அவருக்கு சாவு கிடையாது என்பது ஐதீகம். அவர் பல ராமாயண யுகம் முடிந்தபின்னர் கூட பல யுகங்களாக பூமியில் வாழ்ந்து வந்த நிலையில், மகாபாரத்தையும் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிலும் விரிவாக அவர் இரண்டு தடவை கிருணரை சந்திக்க சென்றுள்ளார். அந்தவேளை மூண்ட போரில் அவர் அர்சுணனோடு பேர் புரிந்து ஒரு முறை தோற்றும் உள்ளார். முதல் முறை அர்சுணரை வென்ற ஹனுமன், இரண்டாவதாக நடைபெற்ற போரில் அர்சுணனிடம் தோல்வியை தழுவியதாக வரலாறுகள் உள்ளது. இருப்பினும் இந்தக் கதை அடங்கிய , நூல் தற்போது பாவனையில் இல்லை என்பதனால் பல நூற்றாண்டுகளாக ராமாயணத்திற்கு பின்னர் ஹனுமனுக்கு என்ன நடந்தது என்பது போன்ற விடையங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
பூமியில் அசுரரை எதிர்த்து ராமர் களம் இறங்கியவேளை, தனது ரூபங்களில் ஒருவரான ஹனுமனை சிவன் அனுப்பி வைக்கிறார். ஆனால் சில இடங்களில் சிவனையே நிந்தனை செய்யும் போக்கு மகாபாரத்திலும் ஏன் ராமாயணத்திலும் உள்ளது. எது எப்படி என்றாலும் வைஷனவர்கள்(ராமரை வழிபடுபவர்கள்) எந்தக் கலாத்திலும் சிவனை ஒரு கடவுளாக ஏற்றுக்கொண்டது இல்லை. மாறாக அவரை தேவர் குலத்தில் சேர்த்து மகாதேவர் என்றே அழைத்து வந்தார்கள். இதுவே உண்மை.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்