Header Ads

பெண்களை அங்கே இங்கே தொட்டு இந்தியாவை அசிங்கப்படுத்திய காடையர்கள் கிழி கிழி



இந்தியாவின் பெங்களூரில் 31ம் திகதி இரவு நடந்த கொடூரமான விடையங்களை, பல வெளிநாட்டு ஊடகங்கள் செய்தியாக போட்டு கிழி கிழி என்று கிழிக்கிறார்கள். அனைவராலும் மிகவும் நாகரீகம் மிக்க நகரம் என்று போற்றப்படுவது பெங்களூர். அங்கே புத்தாண்டுக்கு பிறக்க இருக்கும் நேரத்தில் , நகரின் மத்திய பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள். சுமார் 60,000 மக்கள் அங்கே கூடியதாக கூறப்படுகிறது. இந்த சன நெரிசலை சாட்டாக வைத்து பெரும் ஆண்கள் கூட்டம் ஒன்று பெண்கள் மீது தொட்டு, அவர்களின் அந்தரங்க உறுப்புகளை தொட்டும் பெரும் அசிங்கமான விடையங்களில் ஈடுபட்டுள்ளார்கள்.

இது ஒன்றிரண்டு பேரால் நிகழ்த்தப்படவில்லை. பல நூறு ஆண்கள் இதனை செய்து பரவலாக பல பெண்களை, பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்கள். இதேவேளை 7,000 தொடக்கம் 8,000 ரூபா பணம் கட்டி, ஆடம்பர ஹோட்டலுக்கு சென்ற பெண்களை கூட அங்கே நின்ற ஆண்கள் விட்டுவைக்க வில்லை என்று ஒரு பெண் BBC செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார். 8,000 ரூபா கட்டி, ஒரு ஹோட்டலுக்கு வருபவர் என்றால் அவர் நிச்சயம் ஒரு நல்ல குடும்பத்து ஆணாக தான் இருப்பார் என்று தாம் நினைத்தது பெரும் தவறு என்றும். சேரியில் உள்ள ஆண்கள் செய்வதை விட இவர்கள் மிகவும் கேவலமாக நடந்துள்ளார்கள் என்றும் அப்பெண் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனை அறிந்த பொலிசார் உடனே அங்கே சென்று பெரும் தடியடி நடத்தினார்கள். ஆனால் நீ என்ன செய்தால் என்ன நான் செய்வதை செய்வேன் என்று ஆண்கள் தமது வேலையைக் காட்ட தவறவில்லை. இதனால் ஒரு பெண் எவ்வளவு பாதிக்கபப்ட்டுள்ளாள் என்றோ. இரவில் வெளியே செல்ல பயமாக இருக்கிறது. பயங்கரமான கனவுகள் வருகிறது. இவை அனைத்தையும் அந்த ஆண்கள் அறிவார்களா என்று அப்பெண் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார் ?


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.