அட பாவிகளா லண்டனில் இப்படியுமா காரை ஓட்டுகிறார்கள் ? அதிர்ச்சியில் பொலிசார்
லண்டனில் பொலிசார் சந்தேகத்திற்கு இடமான வாகனம் ஒன்றை நிறுத்தியுள்ளார்கள். அதில் இருந்தவர்கள் சற்று பரபரப்பாக காணப்பட்டனர். இதனால் பொலிசார் அவர்களை மேலதிகமாக விசாரிக்க முற்பட்டவேளை. சாரதி அமரும் சீட்டுக்கு அருகாமையில் உள்ள பயணியின் சீட் ஒரு பிளாஸ்டிக் சேர் என்பதனை பார்த்து அதிர்ந்து போனார்கள்.
இப்படியா இதுவரை காலமும் பயணம் செய்தீர்கள் என்று பொலிசார் வியப்பில் ஆழ்ந்தார்கள். சீட் பெலிட் இல்லை. பிரேக் அடித்தால் அந்த பிளாஸ்டிக் நாற்காலி நகரும். அன் நபர் கண்ணாடியோடு முட்டி மோதும் அளவு நிலமை சீரியசாக இருக்கும். எதனையும் கருத்தில் கொள்ளாது அவர்கள் ஜாலியாக வாகனத்தை இதுவரை கலாமும் ஓட்டிச் சென்றுள்ளார்கள் என்றால் பாருங்களேன்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்