சாகப்போகும் மஹிந்த மற்றும் கோத்தா! பொன்சேகாவின் தகவலினால் இருவரும் பெரும் அச்சத்தில்!
மரணிப்பதற்கும்,பயங்கரங்களுக்கு முகம் கொடுக்கவும் தயாராகிக் கொள்ளுங்கள் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
மகிந்தவின் ஆட்சிக் கவிழ்ப்பு திட்டம் தொடர்பில் நேற்று ஊடகங்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
மகிந்தவின் ஆட்சிக் கவிழ்ப்பு என்பது புஷ்வானம் போன்றது எந்தவகையிலும் அதற்கு இடம் கொடுக்கப்பட மாட்டாது. போலித் திட்டங்களினால் ஆட்சியை கவிழ்க்க முடியாது.
2020ஆம் ஆண்டு கூட்டு எதிர்க்கட்சி தலைமையில் புது ஆட்சி அமைக்கப்படும் என கூறியுள்ளார்கள்.
அவ்வாறு ஆட்சி அமைக்கப்படும் என்றால், நீங்கள் அனைவரும் மீண்டும் தாக்குதலை மேற்கொள்ள தயாராக இருங்கள். மரணிக்கவும் தயாராக இருந்து கொள்ளுங்கள்.
மீண்டும் வெள்ளை வேன் கலாச்சாரம் வந்து சேரும் அவற்றில் இருந்து தப்பிக்கொள்ள இடங்களையும் தயார் படுத்திக் கொள்ளுங்கள்.
ரவுடிகளின் அராஜகங்களுக்கும், அச்சத்தின் மத்தியில் வாழவும் தயாராகுங்கள்.
இவ்வாறான பயங்கரங்களை சந்திக்க வேண்டும் என நினைக்கின்றீர்களா? அல்லது அவற்றுக்கு எதிராக ஒன்று திரள வேண்டுமா என்பதனை மக்களே இப்போது முடிவுசெய்ய வேண்டும்.
அதேபோல் கோத்தபாய மீண்டும் அரசியலுக்கு வர திட்டமிடுகின்றார். அவரை வரவேற்கின்றேன்.
ஆனால் அவர் தோல்வியை சந்திப்பார்.
அப்படி வருபவர் சும்மா இருக்கமாட்டார் தனக்கு கீழ் குழுக்களை அமைத்துக் கொள்ளுவார் தான்தோன்றித்தனமாக செயற்படுவார் எனவும் பொன்சேகா தெரிவித்தார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்