ஈஸ்வரன் கடை முதலாளிக்குப் பயந்து நடுங்கினரா யாழ்ப்பாணப் பொலிசார்
அரசியல்வாதிகளின் வால்களுக்கும் பயந்து ஒடுங்கி நடக்கும் பொலிசாரின் நடவடிக்கைகளை தமிழ்நாட்டு சினிமாக்களில் பாத்திருப்பீர்கள். அதே நிலைதான் யாழ்ப்பாணத்திலும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றதா? என பொதுமக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் ஈஸ்வரன் ரான்ஸ்போட்டிற்கு சொந்தமான லொறியில் இருந்து வீழ்ந்த இரும்புக் கம்பிகள் அவ் வழியால் சென்று கொண்டிருந்த ஹயஸ் வாகனத்தை சேதமாக்கியுள்ளன.
இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் போயுள்ளது. அங்கு வந்த பொலிசார் அந்த லொறியின் உரிமையாளர் அரசியல் பின்புலம் உள்ளவர் என அறிந்தவுடன் வழக்குப் பதிவு செய்யாது சேதமாக்கப்பட்ட வாகனத்தின் சாரதியை பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறு கூறியதாக சாரதி தெரிவித்துள்ளார்.
இதே வேளை வேறு எவருடைய லொறியில் இவ்வாறான செயற்பாடு நடந்திருந்தால் உடனடியாக பொலிசார் லொறியையும் பொலிஸ்நிலையம் கொண்டு சென்று வழக்குப் பதிவு செய்துவிடுவர் எனவும் அரசியல் செல்வாக்குள்ளவருக்கு சொந்தமான லொறி என்பதால் பொலிசார் அவ்வாறு செய்யவில்லை எனவும் அங்கிருந்த பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்