அழுதாலும் அழுத்தம் திருத்தமாக பேசிய சசிகலா: கன்னி உரையின் வீடியோ அதிர்வில்
சற்று முன்னர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் சசிகலா அவர்கள் உரையாற்றியுள்ளார்கள். மிக முக்கியமான உறுப்பினர்களுக்கு மத்தியில் சசிகலா அவர்களின் கன்னி உரை இடம்பெற்றுள்ளது. இதில் அவர் தான் 29 வயது முதல் அம்மாவோடு 33 ஆண்டுகள் இருந்ததாகவும். தனக்கு தற்போது 62 வயது ஆகிவிட்டதாகவும் கூறியுள்ளார். கழகத்தில் அம்மா மற்றும் எம்.ஜியாரை தவிர யாருக்கும் முக்கியத்துவம் இல்லை என்பதனையும் அவர் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ள நிலையில்.
முதலில் அழுதாலும் நேரம் போக போக மிகவும் கம்பீரமாக உரையாற்றினார் என்று, இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அ.தி.மு.க முக்கிய உறுப்பினரும் அதிர்வு இணையத்தின் நண்பருமான முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். சின்னாம்மாவின் குரல் எப்படி இருக்கும் என்று 33 ஆண்டுகளாக எவரும் கேட்டதே இல்லை. குறிப்பாக ஈழத் தமிழர் விடையத்தில் சசிகலா அவர்களின் கணவர் நடராஜன் அவர்கள் மிக முக்கிய பங்காற்றி வரும் நிலையில். பல ஈழத் தமிழர்கள் தமிழ் நாட்டில் நடக்கும் அரசியல் மாற்றம் தொடர்பாக , அவதானித்து வருகிறார்கள். அவர்களுக்காக இதோ வீடியோ இணைப்பு:

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்